மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தவெக ஆட்சி நல்ல வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது! தருமபுரம் ஆதீனம்

தவெக ஆட்சி பற்றி தருமபுரம் ஆதீனம் கூறுவது...

Thiruvavaduthurai Adheenam

தருமபுரம் ஆதீனம்

Published On :22 அக்டோபர் 2026, 1:51 pm IST

தவெக ஆட்சி நல்ல வகையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக தருமை 27வது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கூறினார்.

மாமன்னன் இராஜராஜ சோழனின் 1,041 வது சதய விழாவை முன்னிட்டு தருமை 27வது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

தஞ்சை பெரிய கோயிலான பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழன் மாமன்னனுடைய சதயப் பெருவிழா மிகச் சீரோடும் சிறப்போடும் நேற்றைய நாள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைய நாள் பெருவுடையாருக்கு அபிஷேகமும், வீதி உலாவும், கலை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனுடைய பரம்பரை அறங்காவலர், அரசு அலுவலர்கள் அரசு நல்ல முறையில் இந்த ஏற்பாட்டினைச் செய்திருக்கிறார்கள். ஆகையால் எல்லோரும் இதில் கலந்து கொள்ளுங்கள்.

உலகம் முழுவதும் ராஜராஜ சோழன் தன்னுடைய வாழ்நாளைப் பொதுமக்களுக்காகவும், சமயத்திற்காகவும் அர்ப்பணித்தவன். திருமுறைகளைக் கண்டெடுத்துக் கொடுத்ததினால் அவனுக்குத் திருமுறை விழா கொண்டாட வேண்டும் என்கின்ற நிலையிலே, எங்களுடைய ஆதீனத்திலே பாடசாலையில் பயிலுகின்ற 45 பிடார்களை வைத்து ஓதுவார்கள் - பிடார் என்றால் ஓதுவார்கள். அவர்களை வைத்துத் திருமுறை விண்ணப்பம் செய்ததாக நமக்குக் கல்வெட்டு காட்டுகிறது. அந்த வகையிலே இங்கே நாங்கள் 45 ஓதுவா மூர்த்திகளோடு இன்றைக்குப் பேரபிஷேகமும் இங்கே நடைபெறுகிறது.

இந்த விழா ஏற்பாட்டினை மிகச் சீரிய முறையில் செய்திருக்கின்ற அரசுக்கும், திருக்கோயில் பரம்பரை அறங்காவலர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், விழாத் தலைவர்கள், அரங்கத் தலைவர்கள் அனைவருக்கும் நமது நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தஞ்சை பெரிய கோயிலுக்கு யானை பெறுவது குறித்து கேட்டதற்கு எங்களுடைய வைத்தியஸ்வரன் கோயிலுக்கு இப்போதுதான் யானை வந்திருக்கு. இன்னும் மூன்று யானைகளுக்கு நாங்கள் விண்ணப்பம் செய்திருக்கிறோம். குஜராத் அரசாங்கத்திலிருந்து, அசாமில் இருந்து எங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. தஞ்சை பெரிய கோயிலுக்கும் அந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்பாடுகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். மிக விரைவில் அடுத்த விழாக்குள் யானை வந்துவிடும்.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தவெக ஆட்சி நல்ல வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.