மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தவெக அரசை தவறாக வழி நடத்தும் அதிகாரிகள்: சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு

சேலத்தில் சௌமியா அன்புமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பற்றி....

Officials are misleading the TVK government: Allegation by Sowmiya Anbumani

சௌமியா அன்புமணி

Published On :24 அக்டோபர் 2026, 4:03 pm IST

தமிழக வெற்றிக்கழக அரசை அதிகாரிகள் தவறாக வழி நடத்தி வருவதாக தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், வெள்ளக்கல் பட்டியில் சேலம், தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த குப்பைகளைச் சேகரித்து அதை எரியூட்டி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. திட்டத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தை பசுமைத்தாயக இயக்க தலைவரும் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினருமான சௌமியா அன்புமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சேலம் நீர் ஆதார பாதுகாப்பு இயக்கத்தினர் மற்றும் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவரிடம் எடுத்துரைத்தனர்.

ஆய்வுக்குபி பின்னர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக ஆட்சியின் கடைசி காலகட்டத்தில் குப்பைகளை எரியூட்டும் திட்டம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதையே சற்று பெயர் மாற்றி குப்பைகளை எரியூட்டி அதில் மின்சாரம் தயாரிப்பது என்று திட்டத்தினை அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர். இத்திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு, பொதுமக்களுக்கான பாதிப்புகள் என எதனையுமே கருத்தில் கொள்ளாமல் அதிகாரிகள் தமிழக அரசை தவறாக வழி நடத்தி வருகின்றனர். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது 28% டயாக்சின் வெளிவருவதால் சேலத்தில் உள்ள 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு, உடல் நலக்குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.

200 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டமும் 800 கோடி ரூபாய் மதிப்பிலான சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டமும் சேலம் மாவட்டத்தை பாலைவனமாக்கும் திட்டங்கள். இந்த திட்டங்களின் பாதிப்புகளை முழுமையாக எடுத்துக் கூறாமல் அதிகாரிகள் தவறாக அரசை வழி நடத்தி வருகின்றனர் என்றார். வெறும் பத்து மெகாவாட் மின்சார உற்பத்திக்காக 15 லட்சம் மக்களின் வாழ்க்கையோடு விளையாடும், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இதுகுறித்து முதல்வரைச் சந்தித்து திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முறையிடுவோம்.

மேலும் பசுமைத்தாயகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சட்டரீதியாக அழுத்தம் கொடுத்து இந்த திட்டத்தை தடுத்து நிறுத்துவோம். அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அதிக அளவு குப்பைகளை உருவாக்குபவர்களே அதனை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி அகற்ற வேண்டும் என்ற விதிமுறையை தமிழக அரசு பயன்படுத்தி குப்பைகளை உருவாக்கும் இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும் சேலத்தில் குப்பைகளை எரியூட்ட உள்ள இடம் கனிம வளம் நிறைந்த பகுதியாகும் மூன்றாயிரம் கோடி ரூபாய் கனிம வளம் நிறைந்துள்ள இந்த பகுதியை குப்பை மேடாக்கும் திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கும் என்று தெரிவித்தார்.

Summary

Dharmapuri MLA Sowmiya Anbumani stated that officials are misleading the TVK government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.