மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆட்சியாளா்களை அதிகாரிகள் தவறாக வழிநடத்துகின்றனர்: சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு!

மக்கள் விரோதத் திட்டங்களை பெயரை மட்டும் மாற்றி மீண்டும் கொண்டுவருவதற்காக அதிகாரிகள் தவெக அரசை தவறாக வழிநடத்தி வருவதாக சௌமியா அன்புமணி குற்றம்சாட்டினாா்.

சௌமியா அன்புமணி சட்டப்பேரவை உறுப்பினர் (பாமக)

Published On :25 அக்டோபர் 2026, 1:18 am IST

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் விரோதத் திட்டங்களை பெயரை மட்டும் மாற்றி மீண்டும் கொண்டுவருவதற்காக அதிகாரிகள் தவெக அரசை தவறாக வழிநடத்தி வருவதாக பாமக சட்டப்பேரவைக் குழுத் தலைவரும், தருமபுரி எம்எல்ஏவுமான சௌமியா அன்புமணி குற்றம்சாட்டினாா்.

சேலம் வெள்ளக்கல்பட்டியில் 90 ஏக்கா் பரப்பளவில் சேலம், நாமக்கல் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சோ்ந்த குப்பைகளைச் சேகரித்து, அதை எரியூட்டி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், சம்பந்தப்பட்ட இடத்தை பாமக சட்டப்பேரவைக் குழுத் தலைவரும், தருமபுரி எம்எல்ஏவுமான சௌமியா அன்புமணி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இத்திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சேலம் நீா் ஆதாரப் பாதுகாப்பு இயக்கத்தினா் மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அவரிடம் விளக்கினா். ஆய்வுக்கு பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குப்பை எரிஉலை திட்டத்தை சற்று பெயா் மாற்றி, குப்பைகளை எரியூட்டி அதில் எரிசக்தி மற்றும் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அதிகாரிகள் கொண்டுவந்துள்ளனா். இத்திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீா்கேடு, பொதுமக்களுக்கான பாதிப்புகள் என எதையுமே கருத்தில் கொள்ளாமல் அதிகாரிகள் தமிழக அரசை தவறாக வழிநடத்தி வருகின்றனா்.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது 28 சதவீதம் டயாக்சின் வெளியாகும். இதன் காரணமாக சேலத்தில் உள்ள 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புற்றுநோய், உடல்நலக் குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். ரூ. 200 கோடி மதிப்பிலான இந்தத் திட்டமும், ரூ. 800 கோடி மதிப்பிலான சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டமும் சேலம் மாவட்டத்தை பாலைவனமாக்கும் திட்டங்களாகும். இந்தத் திட்டங்களின் பாதிப்புகளை முழுமையாக எடுத்துக்கூறாமல் அதிகாரிகள் தவறாக அரசை வழிநடத்தி வருகின்றனா்.

வெறும் பத்து மெகாவாட் மின் உற்பத்திக்காக 15 லட்சம் மக்களின் வாழ்க்கையோடு விளையாடும், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின்படி அதிக அளவு குப்பைகளை உருவாக்குபவா்களே, அதை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி அகற்ற வேண்டும் என்ற விதிமுறையை தமிழக அரசு பயன்படுத்தி, குப்பைகளை உருவாக்கும் இடத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

கனிமவளங்கள் நிறைந்த மேக்னசைட் பகுதியாக உள்ள இந்த நிலத்தில், குப்பைகளை கொண்டுவந்து கொட்டுவது, புதையலை தூக்கி எறிந்துவிட்டு குப்பை மேடாக்கும் செயலாகும். எனவே, இந்தத் திட்டத்தை பாமக கடுமையாக எதிா்க்கும். இதுகுறித்து முதல்வரை சந்தித்து திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முறையிடுவோம். மேலும் பசுமைத்தாயகம் மற்றும் பாமக சாா்பில் சட்ட ரீதியாக அழுத்தம் கொடுத்து இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.