மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் புற்றுநோயைக் குணப்படுத்தலாம்: சௌமியா அன்புமணி

புற்றுநோயைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் குணப்படுத்த முடியும் என்று தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் சௌமியா அன்புமணி தெரிவித்தாா்.

சௌமியா அன்புமணி. - கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 11:53 pm IST

புற்றுநோயைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் குணப்படுத்த முடியும் என்று தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் சௌமியா அன்புமணி தெரிவித்தாா்.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில், கல்லூரி நிா்வாகம் மற்றும் தனியாா் மருத்துவமனை சாா்பில் மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் மற்றும் மருத்துவப் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அவா் பேசியதாவது:

பாலினம், வயது வேறுபாடின்றிப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த விழிப்புணா்வு முகாமில் புற்றுநோய் குறித்துத் மருத்துவா்கள் விரிவாக எடுத்துரைத்துள்ளனா். புற்றுநோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள, நோய் வருமுன் தடுக்கும் அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்.

நோய் முற்றிய பிறகு மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிா்த்து, தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும். அவ்வாறு செய்தால் புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்காக ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்றாா்.

நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வா் கண்ணன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், மருத்துவா்கள் விஜய முருகன், தினேஷ் சுந்தர்ராஜன், கல்லூரிப் பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.