மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை; இந்த இரண்டும்தான் காரணங்கள்! சௌமியா அன்புமணி

தவெக அமைச்சரவையில் பாமக இடம்பெறுமா என்பது குறித்த கேள்விக்கு பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பதில்...

Sowmya Anbumani

சௌமியா அன்புமணி - X / Sowmya Anbumani

Published On :31 அக்டோபர் 2026, 6:23 pm IST

தவெக அமைச்சரவையில் பாமக இடம்பெறுமா என்பது குறித்த கேள்விக்கு பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பதில் அளித்துள்ளார்.

சென்னையில் நகர்புற நீடித்த வளர்ச்சிக்கான திட்டம் குறித்து நடைபெற்ற உலக நகரங்கள் நாள் நிகழ்ச்சியில் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, ஏன் வீட்டில் உள்ள குழந்தைகளுக்குக்கூட பாதுகாப்பில்லை. பெண்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு காரணம் தமிழகத்தில் மதுப் பழக்கம், போதைப் பழக்கம்தான். இங்கு மதுபானங்கள் சட்டரீதியாக விற்கப்படுகிறது, போதை பழக்கம் சட்டவிரோதமாக இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்றால் இந்த இரண்டையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதேபோல காவல்துறையை பலப்படுத்த வேண்டும். காலியாக உள்ள காவல்துறை இடங்களை நிரப்பி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

தமிழக அமைச்சரவையில் பாமக இடம்பெறும் சூழ்நிலை இல்லை. நீங்கள் எதிர்பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொறுப்புள்ள கட்சியாக செயல்பட்டு அரசுக்கு நல்ல ஆலோசனைகளை கொடுப்பதற்கு என்றைக்குமே தயாராக இருக்கிறது" என்றார்.

Summary

These two reasons for the lack of safety for women and children: Sowmya Anbumani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.