மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மண்ணின் மானம் காத்த மருது சகோதர்களுக்கு மானமிகு வீரவணக்கம்! மு.க. ஸ்டாலின்

மருது சகோதரர்களின் நினைவு நாளில் அவர்களை நினைவுகூர்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவு...

MK stalin

சிவகங்கை திருப்பத்தூரில் உள்ள மருது பாண்டியர்களின் மணிமண்டபத்தில் திமுகவினர் மரியாதை... - X / MK stalin

Published On :24 அக்டோபர் 2026, 12:51 pm IST

மருது சகோதரர்களின் நினைவு நாளில் அவர்களை நினைவுகூர்ந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட தங்கள் இன்னுயிரை நீத்த சிவகங்கை மருது சகோதரர்களின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் பலரும் அவர்களை நினைவுகூர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"மண்ணின் மானம் காத்த மருதிருவருக்கு மானமிகு வீரவணக்கம்!

புறநானூற்றுத் தமிழர் வீரத்துக்கு இலக்கணமாக ஆங்கிலேயரை எதிர்த்து நின்று போர் புரிந்த சிவகங்கைச் சீமையின் சீற்றமிகு காளைகள் பெரிய மருதுவும் சின்ன மருதுவும்.

இந்தியர் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையோடு போராடினால் அந்நியர் ஆட்சியை அடியோடு அகற்றிடலாம் என அனைவருக்கும் முன்பே 'ஜம்புத்தீவு பிரகடனம்' வழியாக முழங்கிய சமூக நல்லிணக்க வீரர்கள் மருது சகோதரர்கள்.

உயிரைத் தியாகம் செய்து விடுதலை உணர்வை விதைத்த அந்தப் போராளிகளின் நினைவு நாளில் அவர்களுக்கு என் வீரவணக்கம்!" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

DMK leader M.K. Stalin is remembering the Marudhu brothers on their death anniversary

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.