மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான முதல்வர் வாயைத் திறக்காதது ஏன்? மு.க. ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து மு.க. ஸ்டாலின் கேள்வி...

M.K. Stalin

மு.க. ஸ்டாலின். - X

Published On :26 அக்டோபர் 2026, 3:40 pm IST

சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான முதல்வர் விஜய், தற்போது வாயைத் திறக்காதது ஏன்? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளுக்கு தவெக அரசைக் கண்டித்து திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மு.க. ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது:

”பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள்

  • சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது.

  • மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான்.

  • காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது.

  • வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன.

  • த.வெ.க. ஆட்சியில் ’ஃப்ரீ ரன்’ கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள்.

  • தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது.

  • சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை?

  • சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிர் அணி

    சார்பில் போராட்டம் நடத்தப்படும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

DMK Leader MK Stalin asks question to CM Joseph Vijay not Opened his mouth regards law and order issue

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.