கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ கீழ்த்தரமான செயல்: தவெக மீது திமுக புகார்

மு.க. ஸ்டாலின் தொடர்பாக தவெகவினர் வெளியிட்ட சித்திரிப்பு விடியோ குறித்து நடவடிக்கை எடுக்குமாறு திமுக புகார் அளித்தது குறித்து...

AI video of M.K. Stalin released by TVK IT Wing

தவெகவினர் வெளியிட்ட சித்திரிப்பு விடியோ - X | TVK IT Wing

Published On :31 அக்டோபர் 2026, 6:32 pm IST

முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்பாக தவெகவினர் வெளியிட்ட சித்திரிப்பு விடியோ குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.

கடந்த திமுகவின் ஆட்சியை கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினே அவமதித்துப் பேசும் வகையில் சித்திரிக்கப்பட்ட விடியோவை தவெகவினர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், மு.க. ஸ்டாலின் குறித்த சித்திரிக்கப்பட்ட அவதூறு விடியோ தொடர்பாக தவெக மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என திமுக திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுடன் பரந்தாமன் பேசியதாவது, "மு.க. ஸ்டாலின் பேசிய காணொலியைத் திரித்து, திமுக மற்றும் மு.க. ஸ்டாலின் மீது களங்கம் விளைவிக்கும் வகையிலான காணொலியை தவெகவின் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

கடந்த திமுக ஆட்சி மோசமாக இருந்ததாக மு.க. ஸ்டாலினே சொல்வதாகத்தான் சித்திரிப்புக் காணொலியை பார்க்கும் பாமரர்கள் நினைப்பார்கள். பொதுமக்களிடையே தவறான மற்றும் விஷமத்தனமான கருத்துகளை நாட்டில் எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் செய்தது கிடையாது. இது ஒரு மோசமான மற்றும் கீழ்த்தரமான நடவடிக்கை.

இதுதொடர்பாக சென்னை பெருநகர மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

Summary

DMK files complaint seeking action over a manipulated video of M.K. Stalin released by TVK IT Wing

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.