மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்

மருது சகோதரர்களின் நினைவு நாளில் அவர்களுக்கு வீரவணக்கத்தைச் செலுத்துவதாக முதல்வர் விஜய் தெரிவித்திருப்பது குறித்து...

மருது சகோதரர்கள் சிலை, முதல்வர் விஜய் - கோப்புப்படம்

Published On :24 அக்டோபர் 2026, 10:20 am IST

மருது சகோதரர்களின் நினைவு நாளில் அவர்களுக்கு வீரவணக்கத்தைச் செலுத்துவதாக முதல்வர் விஜய் சனிக்கிழமை (அக். 24) தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

தாய்நாட்டின் விடுதலைக்காக தம் இன்னுயிரைத் தியாகம் செய்த, சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களின் நினைவு நாளில், அவர்தம் ஒப்பற்ற வீரத்தையும், அளப்பரிய தியாகத்தையும் போற்றி எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.

இந்தியாவின் முதல் சுதந்திரப் போருக்கு முன்னதாகவே, ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து, அனைவரையும் விடுதலைப் பாதையில் ஒன்றிணைக்கும் வகையில், 'ஜம்புத் தீவு பிரகடனத்தை' முழங்கிப் போராடிய மருது சகோதரர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது.

விடுதலை உணர்வைத் தமிழ் மண்ணில் விதைத்த மருது சகோதரர்களின் வீரவரலாறு தலைமுறைகளைக் கடந்தும் நிலைத்திருக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Chief Minister Vijay said on Saturday (Oct. 24) that he would pay tribute to the Marudhu brothers on their memorial day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.