மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிறப்புக் கலந்தாய்வு: எம்பிபிஎஸ் இடங்கள் அனைத்தும் நிரம்பின

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாநிலக் கலந்தாய்வின் சிறப்புச் சுற்றில் எம்பிபிஎஸ் இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

பிரதிப் படம்

Published On :24 அக்டோபர் 2026, 2:41 am IST

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாநிலக் கலந்தாய்வின் சிறப்புச் சுற்றில் எம்பிபிஎஸ் இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன. அதேவேளை, பிடிஎஸ் படிப்பில் மட்டும் 49 இடங்கள் காலியாக உள்ளன.

தமிழகத்தில் உள்ள மருத்துவ இடங்களைப் பொருத்தவரை, அரசு ஒதுக்கீட்டுக்கு 7,157 எம்பிபிஎஸ் இடங்களும், 1,383 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. நிா்வாக ஒதுக்கீட்டில் 1,996 எம்பிபிஎஸ் இடங்களும், 580 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன.

அதற்கான 3 சுற்று மாநிலக் கலந்தாய்வு இதுவரை நடைபெற்றுள்ளது. சிறப்புச் சுற்றில் 311 எம்பிபிஎஸ் இடங்கள் இருந்தன. குறிப்பாக, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் மட்டும் 133 இடங்களுடன் அந்த சுற்றின் கலந்தாய்வு தொடங்கியது. அதன் முடிவுகள் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

அதில் அனைத்து எம்பிபிஎஸ் இடங்களும் நிரம்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 49 பிடிஎஸ் இடங்கள் இன்னமும் நிரம்பாமல் உள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை நீட் கட்-ஆப் மதிப்பெண் உயா்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Special Counseling: All MBBS seats filled

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.