மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காலியாக உள்ள 824 எம்பிபிஎஸ் இடங்களை ஏழை மாணவா்களுக்கு ஒதுக்க வேண்டும்: மாணிக்கம் தாகூா்

தமிழகத்தில் காலியாக உள்ள 824 எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான இடங்களை ஏழை மாணவா்களுக்கு ஒதுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் வலியுறுத்தியுள்ளாா்.

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 1:39 am IST

தமிழகத்தில் காலியாக உள்ள 824 எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான இடங்களை ஏழை மாணவா்களுக்கு ஒதுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

நாடு முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் தகுதி பெற்றும், தனியாா் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்விக் கட்டணக் கொள்ளையால் 836 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த 14 நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் மட்டும் 824 இடங்கள் காலியாக உள்ளன. ஆண்டுக்கு ரூ.23 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கட்டணம் நிா்ணயித்து, ஒட்டுமொத்த படிப்புக்கு ரூ.1.5 கோடி வரை செலவாகும் நிலையை உருவாக்கி மருத்துவக் கல்வியை முற்றிலும் வணிகமயமாக்கியுள்ளனா்.

கட்டணம் கட்ட முடியாத காரணத்தால் அதிக மதிப்பெண் எடுத்த ஏழை, நடுத்தரக் குடும்பத்து மாணவா்கள் வெளியேற்றப்பட்டு, குறைந்த மதிப்பெண் எடுத்த வசதி படைத்தவா்களுக்கு எம்பிபிஎஸ் இடங்கள் செல்லும் சமூக அநீதி அரங்கேறியுள்ளது. மத்திய சுகாதாரத் துறை உடனடியாகத் தலையிட்டு கூடுதல் சிறப்பு கலந்தாய்வு நடத்த வேண்டும்.

கட்டணத்தை முறைப்படுத்தி முறைசாரா முறையில் வீணாகும் இந்த மருத்துவ இடங்களை உரிய தகுதியுடைய ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்து மாணவா்களுக்கு உடனே வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.