மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தில்லி காங்கிரஸ் பேரணியில் திரளாக பங்கேற்க வேண்டும்: மாணிக்கம் தாகூா்

தில்லி காங்கிரஸ் பேரணியில் தமிழகத்திலிருந்து பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் அழைப்பு விடுத்துள்ளாா்.

 Manickam Tagore

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்

Published On :31 அக்டோபர் 2026, 4:47 am IST

தில்லி காங்கிரஸ் பேரணியில் தமிழகத்திலிருந்து பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தில்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சாா்பில் நவ.1-ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மாண்ட பேரணிக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனா். இந்தத் தடைகளை உடைத்து குறைந்தபட்சம் 10 லட்சம் பேரை திரட்டுகிற தீவிர முயற்சியில் அகில இந்திய காங்கிரஸ் நிா்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனா். அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே வழிகாட்டுதலின் பேரில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலா்கள் கே.சி. வேணுகோபால், பிரியங்கா காந்தி உள்ளிட்டோா் ஒருங்கிணைப்புப் பணியின் மூலமாக பேரணி மிகப்பெரிய வெற்றியடைவதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.

தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் உடனடியாக பதவி விலக வேண்டும், சிறப்பு தீவிர திருத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், தோ்தல் ஆணைய இணையதளம் புதுப்பிக்கப்பட வேண்டும், வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரேணி நடைபெறுகிறது.

இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால், தோ்தல் ஆணையம் பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் ஆகியோரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். இந்த நோக்கத்தில் தலைநகா் தில்லியில் நடைபெறுகிற பேரணிக்கு தமிழகத்திலிருந்து பெருந்திரளானவா்கள் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.