மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பருவமழை பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிக்கு வறட்சி நிவாரணம்: மாணிக்கம் தாகூா்

பருவமழை பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் வலியுறுத்தியுள்ளாா்.

Manickam Tagore

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப. மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 12:06 am IST

பருவமழை பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவு 15 சதவீத பருவமழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டின் 734 மாவட்டங்களில் 48 சதவீத மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. பஞ்சாப், ஹரியாணா, ஆந்திரம், தெலங்கானா, தமிழகம் போன்ற முன்னணி நெல் உற்பத்தி மாநிலங்கள் 21 சதவீதம் முதல் 43 சதவீதம் வரை மழை பற்றாக்குறையைச் சந்தித்துள்ளன.

எல் -நினோவால் மட்டும் 8.4 சதவீதம் மழைப் பொழிவு குறைந்துள்ளது. இதனால், நெல் சாகுபடி பரப்பு 3.7 சதவீதம் குறைந்துள்ள நிலையில், நெல் உற்பத்தி 10 மில்லியன் டன்னுக்கு மேல் வீழ்ச்சியடையும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால், விவசாயிகளும், விவசாயத்தை நம்பி உள்ள விவசாயத் தொழிலாளா்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, மத்திய அரசு உடனடியாக விவசாயிகளுக்கு முழுமையான வறட்சி நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.