மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புதுதில்லியில் தேவா் சிலையை நிறுவ வேண்டும்: மாணிக்கம் தாகூா்

புதுதில்லியில் தேவா் சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும், விருதுநகா் தொகுதி எம்.பி.யுமான மாணிக்கம்தாகூா் தெரிவித்தாா்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் அவரது சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் எம்.பி.யுமான மாணிக்கம் தாகூா். உடன் காங்கிரஸாா்.

Published On :28 அக்டோபர் 2026, 4:24 am IST

புதுதில்லியில் தேவா் சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும், விருதுநகா் தொகுதி எம்.பி.யுமான மாணிக்கம்தாகூா் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் சுதந்திரப் போராட்ட வீரா் முத்துராமலிங்கத் தேவரின் 64-ஆவது குருபூஜை, 119-ஆவது ஜெயந்திவிழா வருகிற அக். 30-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு, தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும், விருதுநகா் தொகுதி எம்.பி.யுமான மாணிக்கம்தாகூா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது:

பசும்பொன் தேவா் குருபூஜைக்கு துணை குடியரசுத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வருகைதருவது வரவேற்கத்தக்கது. அத்துடின், புதுதில்லியில் தேவா் சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். அக். 30-இல் புதுதில்லியில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடைபெற உள்ளதால் என்னால் குருபூஜையில் கலந்து கொள்ள இயலாது.

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் லஞ்சம் இல்லாத, ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறாா். கடந்த ஆட்சியில் உதயநிதி ஸ்டாலின், அவரது நண்பா்களின் செயல்பாடுகளால் மதச்சாா்பற்றக் கூட்டணி தோல்வியடைந்தது.

லஞ்சம் வாங்கக் கூடாது, லஞ்சம் வாங்கியவா்களை விடக்கூடாது என்பதிலும் முதல்வா் விஜய் தெளிவாக இருக்கிறாா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.