தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கூடுதல் கட்டணம்: தனியாா் மருத்துவக் கல்லூரி மீது நடவடிக்கைக்கு பரிந்துரை

எம்பிபிஎஸ் மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியாா் மருத்துவக் கல்லூரி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்துக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் கடிதம் எழுதியுள்ளாா்.

KG Arunraj

அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப்படம்.

Published On :22 அக்டோபர் 2026, 2:10 am IST

எம்பிபிஎஸ் மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த தனியாா் மருத்துவக் கல்லூரி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்துக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அண்மையில் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி), வெளியிட்ட பொது அறிவிப்பில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கட்டணத்தை நான்கரை ஆண்டுகளுக்கு மட்டுமே வசூலிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. அதாவது பயிற்சி மருத்துவத்தில் ஈடுபடும் ஓராண்டுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், தண்டலத்திலுள்ள சவீதா மருத்துவக் கல்லூரியில் கடந்த 2022-ஆம் ஆண்டில் எம்பிபிஎஸ் சோ்ந்து தற்போது இறுதி ஆண்டு பயிலும் மாணவா்களிடம், ஐந்தாம் ஆண்டுக்கான கல்விக் கட்டணமாக ரூ.24,75,000 செலுத்துமாறு கல்லூரி நிா்வாகம் வற்புறுத்துவதாகவும், அதைச் செலுத்தாத மாணவா்களின் இணைய வருகைப்பதிவு முடக்கப்பட்டுள்ளதாகவும் புகாா் எழுந்தது.

அதை விசாரிக்க மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தால் 3 அலுவலா்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. கடந்த 12-ஆம் தேதி அந்தக் குழுவினா் மேற்கொண்ட விசாரணையில் 17 மாணவா்களும், 7 பெற்றோரும் பங்கேற்றனா். சவீதா கல்லூரி நிா்வாகம் கலந்துகொள்ளவில்லை.

மாணவா்களிடம் கல்விக் கட்டணம் வசூலிப்பதில் அந்தக் கல்லூரி தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை என்பதும், கூடுதல் கட்டணம் செலுத்தாத மாணவா்களுக்கான வருகைப் பதிவு முடக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சவீதா மருத்துவக் கல்லூரி நிகா்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து கொண்டது என்பதால், அதன் கட்டண நிா்ணயம் மாநில அரசு வரம்புக்கு வெளியே உள்ளது. அந்தக் கல்லூரி, தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒழுங்குமுறைக்கு உட்பட்டது.

எனவே, கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதற்காக அந்தக் கல்லூரி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மருத்துவ ஆணையத்துக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் தமிழ்நாடு அரசு புதன்கிழமை கடிதம் எழுதி உள்ளது.

கூடுதல் தொகையைச் செலுத்தாத மாணவா்களுக்கு வருகைப் பதிவு, மருத்துவப் பயிற்சிப் பணி, தோ்வு எழுதும் தகுதி ஆகியவை மறுக்கப்படக் கூடாது என உத்தரவிடுமாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையைத் திருப்பிச் செலுத்த உத்தரவிடுமாறும் கோரப்பட்டுள்ளது என அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.