தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எஸ்ஐஆர்! தவெக 160 இடங்களில் வென்றிருக்கும்: நிர்மல் குமார்

தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தவெக வெளிநடப்பு செய்தது குறித்து...

CTR Nirmal Kumar

அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 1:14 pm IST

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வாக்காளர்கள் நீக்கப்படாமல் இருந்திருந்தால், தவெக 160 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் திருத்தம், சிறப்பு முகாம், சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, இன்று நடைபெற்ற கூட்டத்தில் தவெக, திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், நாம் தமிழர், தேமுதிக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 9 கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இருப்பினும், பாஜக, அதிமுக, தேசிய மக்கள் கட்சி ஆகிய 3 கட்சிகளும் கூட்டத்தில் பங்கேற்றன.

கூட்டத்தில் தவெக வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, "இனிவரும் காலங்களில் தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்ற நோக்கில்தான் (தவெக) வெளிநடப்பு செய்தோம்.

எஸ்ஐஆர் நடவடிக்கை தேவையற்றது எனும்போது , சிறப்பு சுருக்கத் திருத்தமும் தேவையற்றதுதான். தவறுகளைச் சரிசெய்யாமல் சிறப்பு திருத்தம் கொண்டு வருவது தேவையற்றது.

எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் வாக்காளர்களை நீக்காமல் இருந்திருந்தால், சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 160 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும்" என்று தெரிவித்தார்.

Summary

Minister Nirmal Kumar says if voters had not been removed through SIR, TVK would have won 160 seats

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.