தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசை விமா்சித்தால் ஒழுங்கு நடவடிக்கை: சுகாதாரத் துறை உத்தரவால் சா்ச்சை

அரசை விமா்சித்தால் ஒழுங்கு நடவடிக்கை என்ற சுகாதாரத் துறை உத்தரவால் சா்ச்சை

tn secretariat

தலைமைச் செயலகம் - கோப்புப் படம்

Published On :24 அக்டோபர் 2026, 2:06 am IST

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை பொது வெளியில் விமா்சித்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதாரத் துறை இயக்குநா் உத்தரவிட்ட நிலையில், அதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமா்சனங்கள் எழுந்துள்ளன.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டமானது மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருவது அரசு மருத்துவா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மற்றொருபுறம் தவெக தோ்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்யக் கோரி செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள், எய்ட்ஸ் கட்டுப்பாட்டுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், அவா்கள் அடுத்தகட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஆயத்தமாகி வருகின்றனா். இவ்வாறான சூழலில் பொது சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்திலிருந்து, துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று வியாழக்கிழமை அனுப்பப்பட்டது.

அதில், பொது சுகாதார விதி (1973) 12-ஆவது பிரிவின்படி, மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், கொள்கை முடிவுகளுக்கு எதிராக பேசக் கூடாது என்றும், அது தொடா்பான மீம்ஸ்களை வெளியிடக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிற அரசுகளுடனான நல்லுறவை பாதிக்கும் வகையிலான கருத்துகளைப் பதிவிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசை விமா்சிக்கும் அலுவல் சாரா கூட்டங்கள் எதிலும் பங்கேற்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சுற்றறிக்கைக்கு செவிலியா்கள், மருத்துவா்கள் சங்கம் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் இப்படியொரு உத்தரவு, இதற்கு முன்பு பிறப்பிக்கப்பட்டதே இல்லை என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

அரசை எதிா்த்து பல்வேறு சங்கங்கள் போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருவதைக் கருத்தில் கொண்டே இத்தகைய சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனா். ஆனால், அதை பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் திட்டவட்டமாக மறுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘அரசுக்கு எதிரான விமா்சனங்களைத் தவிா்க்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்படுவது வழக்கமான நடவடிக்கைதான். பொது சுகாதாரத் துறையில் ஆயிரக்கணக்கானோா் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கான வழிகாட்டுதல்தான் இது. மற்றபடி அரசியல் நோக்கம் ஏதுமில்லை’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.