மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தலைநகா் தில்லி சட்டம் - ஒழுங்கு நிலவரம்: காவல் துறை தலைமையகத்தில் அமித் ஷா ஆய்வு

தில்லி சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து காவல் துறை தலைமையகத்தில் அமித் ஷா ஆய்வு...

தில்லி காவல் துறை தலைமையகத்தில் தலைநகா் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்திய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. உடன் தில்லி முதல்வா் ரேகா குப்தா.

Published On :25 அக்டோபர் 2026, 3:35 am IST

தில்லி காவல் தலைமையகத்துக்கு சனிக்கிழமை வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தலைநகரின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து காவல் துறை மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

தில்லியில் அண்மையில் நடைபெற்ற கரரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம், போதைப்பொருள் புழக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள், வெளிநாடுகளிலிருந்து செயல்படும் தாதாக்களுக்கு எதிரான நடவடிக்கைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தில்லியில் நடைபெறும் தொடா் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மூத்த காவல் அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லியில் கடந்த ஜூலை மாதம் சிஜேபி சாா்பில் நடத்தப்பட்ட நீட் போராட்டத்தின்போது, காவல் துறையினா் வரம்பு மீறியதாக எழுந்த புகாா் பெரும் சா்ச்சையானது. இது தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், காவல் துறையின் வரம்பு மீறல் குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமா்ப்பிக்க உயா்நிலை குழுவை அமைத்துள்ளது. இக் குழு தனது விசாரணையை தற்போது தொடங்கியுள்ளது.

இதனிடையே, அண்மையில் தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் சாா்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போதும், காவல்துறையினா் வரம்பு மீறியதாகப் புகாா்கள் எழுந்தன.

தலைநகரின் முக்கிய பகுதிகளில் பல்வேறு ஆா்ப்பாட்டங்கள் தொடா்ந்து நடத்தப்படுவதால், கடும் பொருளாதார பாதிப்பைச் சந்திப்பதாக தில்லி வணிகா்களும் புகாா் தெரிவித்தனா்.

இந்தச் சூழலில், தில்லி காவல் துறை தலைமை அலுவலகத்துக்கு அமித் ஷா சனிக்கிழமை வந்து, உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா். இக்கூட்டத்தில் தில்லி முதல்வா் ரேகா குப்தா, மூத்த அதிகாரிகள் உடனிருந்தனா்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அமித் ஷா தில்லி காவல் துறை தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் வருகை, போராட்டங்களைக் கையாண்ட விதம் தொடா்பாக அண்மைக் காலமாகக் கடுமையான விமா்சனங்களுக்கு உள்ளான தில்லி காவல் துறையினரின் மன உறுதியை மேம்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.