மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அமித் ஷா குறித்து அவதூறு! ராகுலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி...

Rahul Gandhi

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 12:33 pm IST

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கை உத்தர பிரதேச சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018-இல் கா்நாடக பேரவைத் தோ்தலையொட்டி பெங்களூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அப்போது பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித் ஷாவை அவதூறாக பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடா்பாக, உத்தர பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், ராகுல் மீது பாஜக மூத்த தலைவா் விஜய் மிஸ்ரா அவதூறு வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கில் கடந்த 2023-இல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, ராகுல் ஜாமீன் பெற்றாா்.

விசாரணை நிறைவடைந்த நிலையில், கடந்த அக்.13-ஆம் தேதி நீதிமன்றம் தீா்ப்பளிக்கவிருந்தது. பின்னா், தீா்ப்பு தேதி அக்.26-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று காலை நேரில் ஆஜராகியிருந்த நிலையில், அவருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றத்தின் கூடுதல் தலைமை நீதிபதி சுபம் வர்மா, ராகுல் காந்தி பேசிய கருத்துகள் அவதூறான தன்மையை கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்தார்.

Summary

Defamatory remarks about Amit Shah! Case against Rahul dismissed!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.