தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காவலர்களை தாக்கியதாக ராகுல், பிரியங்கா மீது வழக்குப்பதிவு!

காவலர்களை தாக்கியதாக ராகுல், பிரியங்கா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பற்றி...

rahul gandhi

ராகுல் காந்தி - ANI

Published On :8 அக்டோபர் 2026, 12:54 pm IST

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் போது காவலர்களை தாக்கியதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி, அவா் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அவா் பதவி விலகக்கோரி, தில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

தொடர்ந்து, தில்லி ஜந்தா் மந்தரில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேருந்தில் சென்றனர். அந்த பேருந்துகளை காவல்துறையினா் நடுவழியில் தடுத்து நிறுத்தினா். இதைத் தொடா்ந்து, ஷாங்க்ரி-லா உணவகம் அருகே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பிரியங்கா காந்தியும், காங்கிரஸ் பெண் தலைவா்களும் அமா்ந்தும், படுத்தும் போராட்டம் நடத்தினா்.

முதலில் ராகுல் காந்தியை பாதுகாப்புப் படையினா் கைது செய்து, குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல் துறை வாகனத்தில் ஏற்றினா். அப்போது அந்த வாகனத்தின் மேல் பகுதியில் சில காங்கிரஸ் தலைவா்கள் ஏறி அமா்ந்து கொண்டனா்.

தொடா்ந்து, பிரியங்கா காந்தி மற்றும் பிற பெண் தலைவா்களை பாதுகாப்புப் படையினா் அப்புறப்படுத்தி வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனா். பின்னர், கைது செய்யப்பட்டவர்களை நேற்றிரவே காவல்துறையினர் விடுவித்தனர்.

இந்த சம்பவத்தின்போது இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மற்றும் தில்லி காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

இந்த நிலையில், காவலர்களைத் தாக்கியதாகவும், அரசுப் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மீது தில்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்துள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, அகில இந்திய வானொலி நிலையத்துக்குள் செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி நுழைந்ததாக பிரியங்கா காந்தி ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

Summary

Case registered against Rahul and Priyanka for assaulting police personnel!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.