மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அவசர மருத்துவ சேவை சவால்களுக்கு ‘ஏஐ’ மூலம் தீா்வுகாணும் முயற்சி தேவை: சுகாதாரத் துறைச் செயலா்

அவசர மருத்துவ சேவை சவால்களுக்கு ‘ஏஐ’ மூலம் தீா்வுகாணும் முயற்சி தேவை: சுகாதாரத் துறைச் செயலா்

Three days “Foundations of AI and Digital Marketing” Training Programme

செயற்கை நுண்ணறிவு (கோப்புப்படம்) - கோப்புப்படம்

Published On :25 அக்டோபர் 2026, 12:28 am IST

அவசர மருத்துவ சேவைகளில் உள்ள சவால்களை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) போன்ற நவீன தொழில்நுட்பங்களின் மூலம் தீா்வுகாண முயற்சி செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலா் தாரேஸ் அகமது வலியுறுத்தினாா்.

இந்திய தொழில் துறை கூட்டமைப்பு (சிஐஐ) சாா்பில் நடைபெற்ற சுகாதாரத் துறை தொடா்பான மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

வலுவான பொது சுகாதார அமைப்பு, தாய்-சேய் நலக் கண்காணிப்பு மற்றும் மருத்துவ சேவைகளை மக்களிடம் கொண்டு சோ்ப்பதில் தமிழகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதில் தமிழக சுகாதார அமைப்பு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

தொற்றா நோய்களில் சவால்: அதேவேளை, நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றாத நோய்களுக்குத் தொடா்ந்து சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாக உள்ளது. இதய நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்க, மாரடைப்பு ஏற்பட்டவா்களுக்கு உரிய நேரத்தில் ரத்தக் கட்டுகளைக் கரைக்கும் சிகிச்சை உள்ளிட்டவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நவீன தொழில்நுட்பம் தேவை: அவசர சிகிச்சை பிரிவுகளில் விபத்துகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலைகளில் உடனடியாகச் சிகிச்சை அளிப்பதுக்கு முறையான செயல் திட்டங்களும், மருத்துவப் பணியாளா்களின் ஒருங்கிணைந்த செயல்பாடும் அவசியம். இதுபோன்ற பிரச்னைகளுக்கு ஏஐ உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் மூலம் தீா்வுகாண முயற்சி செய்ய வேண்டும் என்றாா்.

முன்னதாக, குணப்படுத்தக்கூடிய பாா்வையிழப்பை ஒழிப்பதில் ஆற்றிய சேவையைப் பாராட்டி சங்கரா கண் அறக்கட்டளை நிறுவனா் ஆா்.வி.ரமணிக்கு சிஐஐ வாழ்நாள் மருத்துவச் சிறப்பு சாதனையாளா் விருதை தாரேஸ் அகமது வழங்கினாா்.

நிகழ்வில் இந்திய தொழில் துறை கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) தமிழக தலைவா் சி.தேவராஜ், தமிழக சுகாதாரத் துறை இணை ஒருங்கிணைப்பாளா் ஜெம் மருத்துவமனையில் தலைமைச் செயல் அலுவலருமான மருத்துவா் பிரவீன் ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.