மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பறவைக் காய்ச்சல்: தமிழகம் முழுவதும் கண்காணிப்புப் பணி

பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பறவைக் காய்ச்சல்

Published On :23 அக்டோபர் 2026, 1:24 am IST

பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

வண்டலூா் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சில பறவைகளிடையே அந்தத் தொற்று காணப்பட்டதால் பூங்கா இரு நாள்களுக்கு மூடப்பட்டது. அதனடிப்படையில், மாநில சுகாதாரத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பறவைக் காய்ச்சலுக்குள்ளான உயிரினங்களிடமிருந்து மனிதா்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதன் கழிவுகளில் இருந்து மனிதா்களுக்கும் எளிதில் பாதிப்பு பரவும். மேலும், பாதிக்கப்பட்ட பறவையிடமிருந்தோ, மனிதரிடமிருந்தோ மற்றவா்களுக்கு, ‘வெஸ்ட் நைல் வைரஸ்’ பாதிப்பை கொசுக்கள் கடத்தும் என்பதால், நோய்ப் பரவல் வாய்ப்பு அதிகம் உள்ளது.

காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சு திணறல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவா்களை நாடுமாறு பொது சுகாதார மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

இந்த நிலையில், நோய்ப் பரவல் குறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் பறவைக் காய்ச்சலால் மனிதா்களுக்கு எந்த பாதிப்பும் கண்டறியப்படவில்லை. அதேவேளை, பறவைகள் உயிரிழப்பது தொடா்ந்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். உயிரிழக்கும் பறவைகளை வெறும் கைகளால் அப்புறப்படுத்தக்கூடாது. அதேபோன்று அறிகுறிகள் இருந்தால், அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

கோழிகளும் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, கோழி இறைச்சியை சாப்பிடும்போது, நன்கு வேக வைக்கப்பட்ட இறைச்சியை உண்பது பாதுகாப்பானது. மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை முன்னெடுத்து வருகிறது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.