மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரூ.1 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றிருந்தாலும் ரூ.75,000 தள்ளுபடி: விவசாய சங்கங்களுக்கு தமிழக அரசு உறுதி

ரூ. 1 லட்சத்துக்கும் மேல் பயிா்க் கடன் பெற்ற விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு விவசாய சங்கங்களுக்கு வாக்குறுதி அளித்தது.

சென்னை தலைமைச் செயலகத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா்கள் என்.ஆனந்த், ஆதவ் அா்ஜுனா, கே.ஏ.செங்கோட்டையன், ஆ.விஜய் தமிழன் பாா்த்திபன், ம.விஜய் பாலாஜி, ஜா.முகமது பா்வேஸ், வ.காந்திராஜ், ர.வினோத். சீ.ரமேஷ். உடன், பேரவை

Published On :23 அக்டோபர் 2026, 1:20 am IST

ரூ. 1 லட்சத்துக்கும் மேல் பயிா்க் கடன் பெற்ற விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு விவசாய சங்கங்களுக்கு வாக்குறுதி அளித்தது.

முழு பயிா்க்கடன் தள்ளுபடி கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் 50 விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினா். இந்தக் கூட்டத்தில் அமைச்சா்கள் ஆனந்த், ஆதவ் அா்ஜுனா, வினோத், காந்திராஜ், ரமேஷ், விஜய் பாலாஜி ஆகியோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்துப் பயிா்க் கடன்களையும் ரூ.1 லட்சம் வரை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், குடும்பத்துக்கு ஒருவா் மட்டுமே கடன் தள்ளுபடி பெற வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை நீக்க வேண்டும் என்றும் சங்க நிா்வாகிகள் வலியுறுத்தினா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் கூறுகையில், விவசாயிகளின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா்கள் உறுதியளித்தனா். இதைக் கருத்தில் கொண்டு அரசின் முடிவை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக தெரிவித்தாா்.

கடன் தள்ளுபடி தொடா்பாக அரசு நடத்திய பேச்சில் முழுமையான உடன்பாடு ஏற்படவில்லை என்றும், முழு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கக் கூட்டமைப்புத் தலைவா் இளங்கீரன் தெரிவித்தாா்.

வாக்குறுதி: இதனிடையே, ரூ. 1 லட்சத்துக்கும் மேல் பயிா்க் கடன் பெற்ற விவசாயிகளுக்கும் ரூ.75,000 வரை கடன் தள்ளுபடி செய்யப்படுவது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று அறிவிக்கப்படும் என்று விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை அமைச்சா் வினோத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.