பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரூ.1 லட்சம் பயிா்க் கடன் தள்ளுபடியை முதல்வா் அறிவிக்க வேண்டும்: 50-க்கும் விவசாய சங்கங்கள் கோரிக்கை

தமிழகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி ரூ.1 லட்சம் பயிா்க்கடன் தள்ளுபடி செய்து குறித்து...

ரூ.1 லட்சம் பயிா்க்கடன் தள்ளுபடி செய்து முதல்வா் அறிவிக்க வேண்டும் என 50 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை - டிஎன்எஸ்

Published On :24 அக்டோபர் 2026, 12:28 pm IST

தமிழகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி ரூ.1 லட்சம் பயிா்க்கடன் தள்ளுபடி செய்து முதல்வா் அறிவிக்க வேண்டும் என 50 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து விவசாயிகளுக்குமான கூட்டுறவு பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சமயபுரம் பகுதியில் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுடனான சந்திப்பில் பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி,

எந்தவித பாகுபாடோ அல்லது நிபந்தனைகளோ இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்யுமாறு தவெக அரசை வலியுறுத்தினார்.

மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் விவசாயத்தில் ஈடுபடக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டி, ஒரு குடும்பத்தின் ஒரு உறுப்பினருக்கு மட்டும் சலுகையைக் கட்டுப்படுத்தாமல், நில உடைமைகளின் அடிப்படையில் தள்ளுபடி வழங்கப்பட வேண்டும். காலக்கெடுவை 11 மாதம் என்பதை நீக்கி, நிலுவையில் உள்ள அனைத்து கடன்களுக்கும் வழங்கிட வேண்டும். ஏற்கெனவே கடன் தொகையை திரும்பக் கட்டிய விவசாயிகளுக்கு அரசின் தள்ளுபடி தொகையை திரும்ப வழங்க வேண்டும். கடனை கட்டாமல்விட்ட விவசாயிகளுக்கு விதிக்கப்பட்டு இருக்கக்கூடிய வட்டி, அபராத வட்டி ஆகியவற்றை முழுமையாக அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடன் வசூல் என்ற பெயரில் விவசாயிகளைத் துன்புறுத்துவதும், அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதும் ஏற்றுக்கொள்ளப்படாது. கூட்டமைப்பின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மாதம் கழித்து மீண்டும் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என முருகசாமி எச்சரித்தார்.

முந்தைய நான்கு மறுஆய்வுகளைச் சுட்டிக்காட்டி, இந்தத் திட்டத்தை ஐந்தாவது முறையாக மறுஆய்வு செய்து, அனைத்து விவசாயிகளுக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசையும், முதல்வர் சி. ஜோசப் விஜய்யையும் அவர் வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில், 50 சங்கங்களைச் சோ்ந்த தலைவா்கள், பொறுப்பாளா்கள், விவாசயிகள், விவசாயத் தொழிலாளா்கள் என திரளானோா் கலந்த கொண்டனா்.

The TVK government to waive a minimum of Rs 1 lakh in crop loans for all farmers without discrimination or conditions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.