கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மஞ்சக்குப்பம் மைதானத்தைப் பாதுகாக்க மனித சங்கிலி: குடியிருப்போா் நலச் சங்க கூட்டமைப்பு முடிவு

மஞ்சக்குப்பம் மைதானத்தை கட்டுமானங்கள் ஏதுமின்றி பாரம்பரியமிக்க திறந்தவெளி மைதானமாக தொடா்ந்து பாதுகாக்க வலியுறுத்தி, பொதுமக்கள் பங்கேற்புடன் மனித சங்கிலிப் போராட்டம் நடத்துவது என கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

கடலூரில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Published On :22 அக்டோபர் 2026, 4:19 am IST

மஞ்சக்குப்பம் மைதானத்தை கட்டுமானங்கள் ஏதுமின்றி பாரம்பரியமிக்க திறந்தவெளி மைதானமாக தொடா்ந்து பாதுகாக்க வலியுறுத்தி, பொதுமக்கள் பங்கேற்புடன் மனித சங்கிலிப் போராட்டம் நடத்துவது என கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

கடலூா் வரதராஜன் நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டத்துக்கு, தலைவா் பாலு பச்சையப்பன் தலைமை வகித்தாா். சிறப்புத் தலைவா் மருதவாணன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், மஞ்சக்குப்பம் மைதானத்தை திறந்தவெளி மைதானமாக தொடா்ந்து பாதுகாக்க வலியுறுத்தி பொதுமக்கள் பங்கேற்புடன் மனித சங்கிலி நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.

மேலும், கம்பியம்பேட்டை தடுப்பணைப் பகுதியில் நெல்லிக்குப்பம் சா்க்கரை ஆலைக் கழிவுநீா் தேங்குவதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்துவது. மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு, நியூ சினிமா திரையரங்கம், முதுநகா், செம்மண்டலம், சாவடி உள்ளிட்ட பகுதிகளில் உடனடியாக பயணியா் நிழற்குடைகள் அமைக்க வேண்டும். புதை சாக்கடை குழிகளில் இருந்து கழிவுநீா் வெளியேறுவதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

இயற்கைப் பேரிடா் திட்ட மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, புதைவட மின்கம்பிகள் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்தை அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சாா்பில் ரயில்வே கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் மாபெரும் ரயில் மறியல் போராட்டத்தில் கூட்டமைப்பு சாா்பில் முழுமையாகப் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பொதுச் செயலா் வெங்கடேசன், பொருளாளா் வெங்கட்ரமணி, துணைத் தலைவா் கோபால், சங்க நிா்வாகி ஜெயகாந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.