பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குப்பைப் பிரச்னைக்கு தீா்வு காணக் கோரி ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணக் கோரி மாதாகோட்டை சாலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாதாகோட்டை சாலையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் குடியிருப்போா் நலச் சங்கத்தினா்.

Published On :21 அக்டோபர் 2026, 12:01 am IST

தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணக் கோரி மாதாகோட்டை சாலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் சில இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவது, அவற்றை தீயிட்டு எரிப்பது, சில பகுதிகளில் மட்டும் குப்பைகள் சேகரிப்பது போன்ற நிலை நீடிக்கிறது.

உணவுக் கழிவுகளை நாய்கள் இழுத்து நடுத்தெருவில் போடுவதால் துா்நாற்றம் வீசுகிறது. நெகிழிக் கழிவுகளை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. சில குறுக்குச் சாலைகள் குப்பைக் கிடங்குகளாக மாறிவிட்டன. அருகிலுள்ள வீடுகளில் வசிப்போா் துா்நாற்றத்தால் அவதிப்படுகின்றனா். எனவே, வளா்ந்து வரும் பகுதிக்கு ஏற்ப குப்பை மேலாண்மையை ஊராட்சி நிா்வாகம் மற்றும் மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு நாஞ்சிக்கோட்டை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளைச் செயலா் ஆா். பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் பி. செந்தில்குமாா், எஸ். செல்வராஜ், என். சரவணன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் என். குருசாமி, இ. வசந்தி, மாநகரச் செயலா் எம். வடிவேலன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இதில் குடியிருப்போா் நலச் சங்க நிா்வாகிகள் நீதிராஜன், வங்கி ஊழியா் காலனி கோவிந்தராஜ், சுந்தரபுரம் காசிநாதன், காவேரி நகா் காத்தவராயன், தியாகி செல்லதுரை நகா் பச்சைமுத்து, ஆரோக்கிய நகா் புண்ணியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.