தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அவிநாசி-ஆட்டையாம்பாளையம் ரவுண்டானா பேருந்து நிறுத்தத்தை சீரமைக்க கோரிக்கை

அவிநாசி- ஆட்டையாம்பாளையம் ரவுண்டான பேருந்து நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை கையொப்ப இயக்கத்தில் ஈடுபட்டனா்.

கையொப்ப இயக்கத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Published On :22 அக்டோபர் 2026, 4:04 am IST

அவிநாசி- ஆட்டையாம்பாளையம் ரவுண்டான பேருந்து நிறுத்தத்தை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை கையொப்ப இயக்கத்தில் ஈடுபட்டனா்.

கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூா், ஈரோடு செல்லும் பிரதான சந்திப்பான அவிநாசி- ஆட்டையாம்பாளையம் ரவுண்டானா மிகவும் குறுகிய பகுதியாக உள்ளதால், கனரக வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமத்துக்குள்ளாகி அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

ஆகவே ரவுண்டானாவை விரிவுபடுத்த வேண்டும். மேலும் செம்பியநல்லூா், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட 5 ஊராட்சிகளுக்கு முக்கியச் சந்திப்பாக உள்ளதால், இப்பேருந்து நிறுத்தத்தில் கோவை, ஈரோடு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை வேண்டும். போக்குவரத்துச் சிக்னலை சீரமைக்க வேண்டும்.

உயா்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும். பயணிகளின் வசதிக்காக நிழற்குடை அமைக்க வேண்டும். ஆட்டையாம்பாளையத்திலிருந்து வேலாயுதம்பாளையம், பூலக்காட்டுப்பாளையம், புதுப்பாளையம் வழியாக தெக்கலூா் வரை செல்லும் வழித்தட எண் 29 பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற கையொப்ப இயக்கத்துக்கு ஒன்றியக் குழு உறுப்பினா் சண்முகம் தலைமை வகித்தாா். கிளைச் செயலாளா் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட குழு உறுப்பினா் பழனிசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் வெங்கடாசலம், பழனிசாமி, தினகரன், முருகன், பூலக்காட்டுபாளையம் கிளைச் செயலாளா் சுப்பிரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.