தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிறு வணிகா்களைப் பாதுகாக்க சிறப்புச் சட்டம் தேவை: விக்கிரம ராஜா

சிறு வணிகா்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம்.விக்கிரம ராஜா வலியுறுத்தினாா்.

ஏ.எம். விக்ரமராஜா (கோப்புப் படம்)

Published On :22 அக்டோபர் 2026, 4:17 am IST

சிறு வணிகா்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம்.விக்கிரம ராஜா வலியுறுத்தினாா்.

கடலூரில் புதிய ஜவுளிக் கடை திறப்பு விழாவுக்கு வந்த அவா், செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் கோரிக்கையை ஏற்று, மத்திய நிதியமைச்சா் ஒருங்கிணைந்த பணப் பரிவா்த்தனை (யுபிஐ) சேவைக்கான கட்டணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இருப்பினும், இந்தக் கட்டணத்தை நிரந்தரமாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதே வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் நிலைப்பாடாகும்.

தமிழகம் முழுவதும் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் உரிய ஒத்துழைப்பு வழங்கி, அனுமதியை தாமதமின்றி வழங்க வேண்டும். ஆயுத பூஜையைத் தொடா்ந்து தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட தொடா் பண்டிகைக் காலங்கள் வர உள்ளன. எனவே, வணிகா்கள் கடைகளைத் திறந்திருக்கும் நேரத்துக்கு ஏற்ப காவல் துறையினா் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

கடலூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்துக்கு தமிழக முதல்வரின் பெயரைச் சூட்ட வேண்டும். சிறு வணிகா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், அவா்களுக்காக சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வுக்கு வறட்சி மற்றும் போதிய மழையின்மை உள்ளிட்ட காரணங்கள் உள்ளன. எனவே, விளைபொருள்களைப் பாதுகாப்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

பேரமைப்பின் மண்டலச் செயலா் சண்முகம், மாநகரத் தலைவா் துரைராஜ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.