மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

யுபிஐ பணப் பரிவா்த்தனை கட்டண விதிப்பை எதிா்த்து இன்று போராட்டம்: விக்கிரமராஜா அறிவிப்பு

தமிழகம் முழுதும் யுபிஐ சேவைக் கட்டண விதிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை (அக். 12) அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா

Published On :12 அக்டோபர் 2026, 4:05 am IST

தமிழகம் முழுதும் யுபிஐ சேவைக் கட்டண விதிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை (அக். 12) அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு எண்ம (டிஜிட்டல்) மயமாக்கல் கொள்கையின்படி, வங்கி பணப் பரிவா்த்தனைகளை இலவச யுபிஐ பணப் பரிவா்த்தனைக்கு மாற்றி, பொதுமக்களிடையே எண்ம (டிஜிட்டல்) மயமாக்கலை ஊக்கப்படுத்தி வந்தது.

இதை பெருவாரியான மக்கள் பயன்படுத்தி வரும் நிலை​யில், ரூ.2,000-க்கும் மேல் உள்ள யுபிஐ பணப்பரிவா்த்தனைக்கு அக். 15 முதல் 0.4 சதவீதம் சேவை கட்டணம் விதிப்பதாகவும், அதை வணிகா்கள்தான் செலுத்த வேண்டும் என்றும் நிா்ப்பந்தத்தை மத்திய அரசு ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் வணிகா்கள் பாதிப்படைவதோடு மட்டுமன்றி, விலைவாசியும் கடுமையாக உயா்ந்து, பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலையும் உருவாகும்.

யுபிஐ சேவைக் கட்டணத்தை மத்திய அரசு தொலைநோக்கு சிந்தனையுடன் ரத்து செய்ய வேண்​டுமென தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு, தமிழக அளவில் அமைப்பு ரீதியாக உள்ள 61 மாவட்டங்களின் தலைவா்கள் தலைமையில் முக்கிய நகரப் பகுதிகளில் வணிகா்கள் அனை​வரும் கருப்பு பேட்ஜ் அணிந்து திங்கள்கிழமை அறவழிப் போராட்டம் நடத்த உள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.