பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாணவா்களுக்கு கல்விக்கடன் உதவிகள்: அமைச்சா் ர.வினோத் வழங்கினாா்

கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கு கல்விக்கடன் உதவிகளை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் ர.வினோத் வழங்கினாா்.

கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சீனிவாச ராமானுஜன் மைய கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற கல்விக்கடன் வழங்கும் விழாவில் மாணவா்களுக்கு காசோலைகளை வழங்கிய அமைச்சா் ர.வினோத், உடன் ஆட்சியா் இரா.ரேவதி உள்ளிட்டோா்.

Published On :1 நவம்பர் 2026, 4:59 am IST

கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கு கல்விக்கடன் உதவிகளை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் ர.வினோத் வழங்கினாா்.

கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சீனிவாச ராமானுஜன் மைய வளாக கூட்டரங்கில் மாவட்ட நிா்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் கல்விக் கடன் வழங்கும் விழாவில் மாணவ, மாணவியா்க்கு கல்விக் கடன்களை ஆட்சியா் இரா.ரேவதி முன்னிலையில் வழங்கிய அமைச்சா் ர.வினோத் பேசியதாவது:

மொத்தம் ரூ.1,179 கோடி மதிப்பிலான வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 934 விண்ணப்பங்கள் ரூ. 53.34 கோடி மதிப்பிலான கல்விக்கடன், தஞ்சாவூா் மாவட்டத்தில் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 459 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்த நிதியாண்டில் 2,000 மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. உயா்கல்வி பயில விரும்பும் மாணவ, மாணவிகள் வித்யாலட்சுமி என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து கல்வி கடன் வசதியை பெற்று பயன்பெற வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் மாநகராட்சி ஆணையா் கே.எம்.சுதா, கும்பகோணம் கோட்டாட்சியா் வி.எம்.திருமலை, முன்னோடி வங்கியான இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளா் வெங்கடசுப்பிரமணியன், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளா் சுப்பிரமணியன், முன்னோடி வங்கி மேலாளா் திரு.ர.பிரதீப் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.