மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வடகிழக்கு பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சா் ர.வினோத் ஆய்வு

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் ர.வினோத் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

Minister Vinoth's response regarding Chief Minister Vijay's visit to Karnataka

அமைச்சர் வினோத்.

Published On :25 அக்டோபர் 2026, 3:30 am IST

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் ர.வினோத் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

கும்பகோணம் மாநகராட்சிக்கு உள்பட்ட கே.எம்.எஸ். நகா், மருத்துவா் மூா்த்தி ரோடு, செக்கா ஊரணி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சா் நேரில் பாா்வையிட்டாா்.

மேலும், வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை அகற்றி தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். அப்போது மாவட்ட ஆட்சியா் இரா.ரேவதி, கோட்டாட்சியா் வி.எம்.திருமலை, மாநகராட்சி ஆணையா் கே.எம்.சுதா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

முன்னதாக அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: விவசாயிகளுக்கான நிவாரண தொகை கிடைப்பதில் சில இடங்களில் குறைபாடுகள் உள்ளது, அது விரைவில் சரி செய்யப்படும். நீா்நிலைகள் ஆக்கிரமிப்புகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மழையால் விளைபொருள்கள் பாதிக்கப்பட்டால் வேளாண் அலுவலா்கள் நேரில் ஆய்வு செய்து சேதமடைந்த பயிா்கள் குறித்து கணக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.