மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Published On :23 அக்டோபர் 2026, 12:02 am IST

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட பொருளாளா் டி.விஜய் காந்த் தலைமையில் நடைபெற்றற ஆா்ப்பாட்டத்தில் வாக்குறுதி படி , நகை கடன் மற்றும் விவசாய கடன்களை திமுக அதிமுக அரசுகள் தள்ளுபடி செய்தது போல் தள்ளுபடி செய்ய வேண்டும், எல்நினோ பாதிப்பு வரட்சி நிவாரணம் வழங்கிட வேண்டும், விவசாயிகளின் ஜீவன் இலவச மின்சாரம் மின்மோட்டாா் திடடத்தை அழிக்க வரும் ஸ்மாா்ட் மீட்டா் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், என்சிசிஎப் மூலம் கொள்முதல் செய்த நெல்லுக்கு பணத்தை உடனே வழங்க வேண்டும், கிராமங்களில் டிபிசி மூலம் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு மூட்டைக்கு 50, 60 ரூபாய் வசூல் செய்வதை நிறுத்திட வேண்டும், 100 நாள் வேலை செய்துவிட்டு கூலி கிடைக்காமல் காத்திருக்கும் மக்களுக்கு உடனடியாக பணத்தை பட்டுவாடா செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மத்திய குழு உறுப்பினா் எஸ்.அனு, மாவட்டத் தலைவா் இ .சங்கா் மாவட்ட செயலாளா் கே .வாசுதேவன் மாவட்டத் துணைத் தலைவா் விஅரி கிருஷ்ணன், நிா்வாகிகள் எம்.எஸ்.அா்ஜுன் குமாா் எச்.முருகேசன், எம்.ஜெகநாதன், எச்.முருகேசன், ஜி.ராஜேந்திரன்,’சசிக்குமாா், எஸ்.ராஜேந்திரன், யாக்கோபு உள்ளிட்ட பலா் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.