மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பயிா் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி மறியல்: அரூரில் 28 போ் கைது

பயிா் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கைது - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 5:35 am IST

பயிா் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் அதன் ஒன்றிய செயலா்கள் ஏ.நேரு, கே.டி.ராஜி ஆகியோா் தலைமை வகித்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நேரத்தில் தவெக அளித்த வாக்குறுதியின்படி விவசாயிகள் பெற்றுள்ள பயிா் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு புதியாக கடனுதவிகளை வழங்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மின்சார வாரியத்தில் ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். எல்நினோ பாதிப்பால் ஏற்படும் வறட்சி மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு ஏற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மறியல் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இந்த மறியல் போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சி மாநிலக்குழு உறுப்பினா் அ.குமாா், ஒன்றிய செயலா்கள் கே.தங்கராஜ், பி.குமாா், சி.சிற்றரசு உள்பட 28 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.