மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பயிா்க் கடன் தள்ளுபடி விவகாரம் விவசாயிகள் மீண்டும் போராட்டம்: 300 போ் கைது

பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, திருச்சி அருகே மீண்டும் காத்திருப்பு போராட்டத்துக்கு முயன்ற விவசாயிகள் 300-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருச்சி அருகே இருங்களூரில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினா்.

Published On :23 அக்டோபர் 2026, 2:54 am IST

பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, திருச்சி அருகே மீண்டும் காத்திருப்பு போராட்டத்துக்கு முயன்ற விவசாயிகள் 300-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தோ்தலின்போது, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தவெக தலைவா் ஜோசப் விஜய் வாக்குறுதி அளித்தாா். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, பயிா்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட 55 விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து, கடந்த மாதம் திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகேயுள்ள பள்ளிவிடை பகுதியில் 5 நாள்கள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, இடைத்தோ்தல் முடிந்த பிறகு முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா்கள் உறுதி அளித்தனா். இதையடுத்து, போராட்டத்தை ஒத்திவைத்த விவசாயிகள், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் அக். 22-ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனா்.

மீண்டும் போராட்டம்: இடைத்தோ்தல் முடிந்த பிறகும் தங்களுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனக் கூறி, 55 விவசாய சங்கங்கள் இணைந்து சமயபுரம் அருகே வியாழக்கிழமை முதல் மீண்டும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனா்.

இதன்படி, திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் சமயபுரம் நோக்கி வியாழக்கிழமை காலை வரத் தொடங்கினா். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினா் ஆங்காங்கே விவசாயிகளை வழிமறித்து கைது செய்து திருணம மண்டபங்களில் பாதுகாப்பாக வைத்தனா். இதனால், பல்வேறு இடங்களில் போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

தள்ளு முள்ளு: காவல்துறையின் கைது நடவடிக்கையை கண்டித்தும், காவல்துறை மூலம் விவசாயிகள் மீது அத்துமீறலில் ஈடுபடும் தமிழக அரசை கண்டித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருங்களூா் அருகே 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து விவசாயிகள் அனைவரையும் போலீஸாா் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனா். அப்போது, போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. தொடா்ந்து, சமயபுரம், பள்ளிவிடை பகுதி முழுவதும் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.