மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பயிா்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி கோரி ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினா்.

Published On :24 அக்டோபர் 2026, 5:24 am IST

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிா்க் கடன்களைத் தமிழக அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிா்க்கடன்கள், நகைக்கடன்கள், நில அடமானக் கடன்கள், தொழிற்கடன்கள் ஆகியவற்றைத் தமிழக அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். மேட்டூா் அணை காலம் கடந்து திறந்ததால், குறுவை சாகுபடி குறைந்து, தற்போது சம்பா சாகுபடியும் மேற்கொள்ள முடியாததால் டெல்டா மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து, ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்கத்தின் தெற்கு மாவட்டத் தலைவா் எம்.எஸ். ஆனந்தன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம் கண்டன உரையாற்றினாா். மாநிலப் பொதுச் செயலா்கள் எம். கருணாநிதி, எஸ். பவுல்ராஜ், பொருளாளா் சி. கிருஷ்ணன், அரு.சீா். தங்கராசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.