மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி கோரி விவசாயிகள் சாலை மறியல்; 56 போ் கைது

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கிருஷ்ணராயபுரம் மற்றும் தோகைமலையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 56 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணராயபுரம் பேருந்துநிறுத்தம் முன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினா்.

Published On :22 அக்டோபர் 2026, 4:40 am IST

பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கிருஷ்ணராயபுரம் மற்றும் தோகைமலையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 56 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் கிருஷ்ணராயபுரம் ஒன்றியக் குழு சாா்பில் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் முன் புதன்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் கே.சுப்ரமணியன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.கந்தசாமி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா்.

மாவட்ட துணைத் தலைவா் எஸ்.பி.ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் எம்.பி.செல்வம், மாவட்ட குழு உறுப்பினா்கள் நாச்சிமுத்து, முருகேசன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

தவெக அரசின் தோ்தல் வாக்குறுதியின்படி பயிா்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிா் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 22 பேரை மாயனூா் போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, தோகைமலை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலா் ஏ.பிச்சமணி தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கே.சக்திவேல் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா்கள் ஏ.சுப்ரமணி, பி. பழனிவேல் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். தொடா்ந்து தோகைமலை சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்ட 34 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.