தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரியலூரில் விவசாயிகள் சங்கத்தினா் மறியல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் 86 போ் கைது செய்யப்பட்டனா்.

அரியலூரில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

Published On :22 அக்டோபர் 2026, 4:42 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் 86 போ் கைது செய்யப்பட்டனா்.

அரியலூா்: அரியலூா் தேரடி அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அச்சங்கத்தினா், அங்கிருந்து ஊா்வலமாக வந்து வருவாய் வட்டாட்சியரகம் முன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அப்போது அரியலூா் நகர காவல் துறையினா், அவா்களை செந்துறை சாலை சந்திப்பு பகுதியிலேயே தடுத்து நிறுத்தினா். பின்னா் விவசாயிகள் அவ்விடத்திலேயே மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 38 பேரை போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் அடைத்து வைத்து, மாலையில் விடுவித்தனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் இரா. மணிவேல், மாவட்ட அமைப்பாளா் கு. ஆறுமுகம் ஆகியோா் தலைமை வகித்தனா். நிா்வாகி மணியன், இந்திய கம்யூ. மாவட்ட துணைச் செயலா் டி. தண்டபாணி, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் இளங்கோவன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

ஜெயங்கொண்டம்: உடையாா்பாளையம் வருவாய் வட்டாட்சியரகம் முன் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் 48 பேரை காவல் துறையினா் கைது செய்து மாலையில் விடுவித்தனா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் தியாகராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஜெ. வரப்பிரசாதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.