தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி நிறைவு: 108 வீணைகள் இசைத்து வழிபாடு!

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்ற 108 வீணைகள் இசைக்கும் சிறப்பு இசை வழிபாட்டு நிகழ்ச்சி குறித்து...

Meenakshi Amman Temple with special worship featuring 108 veenas

நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமியையொட்டி, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்ற108 வீணைகள் இசைக்கும் சிறப்பு இசை வழிபாட்டு நிகழ்ச்சி - டிஎன்எஸ்

Published On :21 அக்டோபர் 2026, 8:50 am IST

மதுரை: உலகப்புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமியையொட்டி, 108 வீணைகள் இசைக்கும் சிறப்பு இசை வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் அம்மன் கோயிலில் இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மன் சன்னதியின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

நவராத்திரி விழாவின் முதல் நாளான அக்டோபர் 11-ஆம் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், இரண்டாம் நாளான 12-ஆம் தேதி அர்த்தநாரீசுவரர் திருக்கோலத்திலும், மூன்றாம் நாளான 13-ஆம் தேதி கோலாட்ட அலங்காரத்திலும், நான்காம் நாளான 14-ஆம் தேதி பட்டாபிஷேக திருக்கோலத்திலும், ஐந்தாம் நாளான 15-ஆம் தேதி தபசு திருக்கோலத்திலும், ஆறாம் நாளான 16-ஆம் தேதி ஊஞ்சல் உற்சவத்திலும், ஏழாம் நாளான 17-ஆம் தேதி முத்தங்கி அலங்காரத்திலும், எட்டாம் நாளான 18-ஆம் தேதி மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்திலும், ஒன்பதாம் நாளான 19-ஆம் தேதி சிவபூஜை செய்யும் திருக்கோலத்திலும் அன்னை மீனாட்சி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் பத்தாம் நாளான விஜயதசமியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நவராத்திரி விழாவையொட்டி, கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நாள்தோறும் ஆன்மிகச் சொற்பொழிவுகள், திருமுறை இன்னிசை, பக்தி இசை, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிலையில், நவராத்திரி உற்சவத்தின் நிறைவு விழாவான விஜயதசமியை முன்னிட்டு 108 வீணைகள் இசைக்கும் சிறப்பு இசை வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வந்திருந்த இசைகலைஞர்கள் பங்கேற்று பல்வேறு பக்தி பாடல்களை இசைத்து சரஸ்வதிக்கு வழிபாடு நடத்தினர் .

மாணவ-மாணவியர்களின் கல்வி, கலை மற்றும்

இசையில் சிறந்து விளங்க வேண்டி நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் வீணை இசையின் மூலம் இறைவழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

இந்திய பாரம்பரிய இசையின் சிறப்பையும் பக்தி உணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த இசை வழிபாடு, நவராத்திரி விழாவின் நிறைவு நிகழ்ச்சிகளில் ஒன்றாக அமைந்தது.

நவராத்திரி விழாவையொட்டி கோயிலில் அமைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளைக் காணவும், பல்வேறு அலங்காரங்களில் காட்சியளித்த அன்னை மீனாட்சியைத் தரிசிக்கவும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

Navaratri concludes at Meenakshi Amman Temple with special worship featuring 108 veenas!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.