பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழ்நாட்டை இருளில் மூழ்கடித்த மின்சாரத் துறைக்கு வெளிச்சம் வருவது எப்போது? டிடிவி தினகரன்

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ஏற்படும் தொடர் மின்வெட்டு குறித்து டிடிவி தினகரன் பதிவு...

TTV Dhinakaran on power cuts at the Madurai Meenakshi Amman Temple

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின் போது மின்தடை. - கோப்புப் படம்

Published On :31 அக்டோபர் 2026, 12:28 pm IST

ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் இருளில் மூழ்கடித்திருக்கும் மின்சாரத் துறைக்கு வெளிச்சம் வருவது எப்போது? என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு இருப்பது குறித்தும் சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தொடர் மின்வெட்டு குறித்தும் அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரிசனம் செய்யச் சென்றபோது ஏற்பட்டுள்ள மின்வெட்டு, மின்வாரியத்தின் அலட்சியத்தையும், நிர்வாக சீர்கேட்டையும் வெளிப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், மயானங்கள் என அனைத்து இடங்களிலும் ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் போராடிய பின்பும், மின்தடையை ஒப்புக்கொள்ளாத மின்வாரியம், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ஏற்பட்ட மின்தடைக்கு முதலில் பராமரிப்பு என்றும், தற்போது பழுது என்றும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி, முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயற்சிப்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.

அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின் கட்டணம் வசூலிப்பதில் குளறுபடி, ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி, ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம், மின் தட்டுப்பாட்டைச் சமாளிக்க அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுப் பின்னர் பொதுமக்கள் கேள்வி எழுப்பியதும் பின்வாங்கியது என, என்ன செய்கிறோம், எதற்காகச் செய்கிறோம் எனத் தெரியாமலும், புரியாமலும் தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டு மின்வாரியம் அடுத்தடுத்த புகார்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது.

அனைத்துத் தரப்பு மக்களின் அத்தியாவசிய அன்றாடத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தைத் தடையின்றி விநியோகம் செய்ய வேண்டிய மின்சாரத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர், 'நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்' என்ற நகைச்சுவைக் காட்சிகளுக்கு ஏற்ப, அனைத்து பிரச்னைகளிலும் தாமாக முன்வந்து மூக்கை நுழைத்து, மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு, அசிங்கப்பட்டு நிற்பதன் மூலம், பிரச்சினை மின்சாரத்திலா அல்லது நிர்வாகத்திலா என்ற கேள்வியே எழுகிறது.

அதே நேரத்தில், கவனக்குறைவாகச் செயல்படுவோர் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறும் முதல்வர் ஜோசப் விஜய், கடந்த ஐந்து மாதங்களாக மக்களைச் சிரமத்திற்கு உள்ளாக்கியும், தனது நிர்வாகத் திறனற்ற செயல்பாட்டால் மின்வாரியத்தை அதலபாதாளத்திற்குத் தள்ளியும், அறிவிக்கப்படாத மின்வெட்டுக்குத் தினந்தோறும் புதுப்புதுக் கதைகளையும் பச்சைப் பொய்களையும் கூறி, முதல்வர் தானே நேரில் ஆய்வு மேற்கொண்ட பின்னரும், அத்துறையின் செயல்பாடுகளில் அக்கறை இல்லாமல் இருந்து வரும் எரிசக்தித் துறை அமைச்சர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?

எனவே, மக்களுக்குத் தேவை தடையற்ற மின்சாரமே தவிர, மின்வாரியத்தின் அற்பக் காரணங்கள் அல்ல என்பதை உணர்ந்து, தமிழகத்தில் சீரான மின்விநியோகத்தை உறுதி செய்வதற்கான நிர்வாகச் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என எரிசக்தித் துறையையும், முதல்வர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

TTV Dhinakaran on power cuts at the Madurai Meenakshi Amman Temple

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.