ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வழிபாடு!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்ததைப் பற்றி...

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம்.

Published On :30 அக்டோபர் 2026, 8:40 pm IST

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், ஆளுநர் ஆர்லேகர் சாமி தரிசனம் செய்தனர்.

பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (அக். 30) காலை மதுரை வந்தார்.

அங்கு முத்துராமலிங்கத் தேவர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக இன்று மாலை 5.30 மணியளவில் கோயிலில் அம்மன் சன்னதி வாசலுக்கு காரில் வருகை தந்தார்.

Story image

தமிழக ஆளுநர் ஆர்லேகர், அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் வரவேற்றனர்.

வருகைதந்த குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூங்கொத்து, சால்வை கொடுத்து மரியாதை அளிக்கப்பட்டது.

Story image

பின்னர் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, முக்குறுணி விநாயகர், எல்லாம் வல்ல சித்தர் சன்னதிகளில் தரிசனம் செய்தார். அவருடன் ஆளுநர் ஆர்லேகர் உடனிருந்தார்.

கடந்தாண்டு குடியரசுத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக சி.பி. ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்திருந்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்ற பின்னர் முதல்முறையாக குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்துள்ளார்.

Summary

Vice President C.P. Radhakrishnan and Governor Arlekar offered prayers at the Madurai Meenakshi Amman Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.