பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நவராத்திர விழா! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ராஜராஜேஸ்வரி அலங்காரம்!!

நவராத்திர விழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ராஜராஜேஸ்வரி அலங்காரம்

நவராத்திரி திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மீனாட்சி அம்மன். - கோப்பிலிருந்து..

Published On :12 அக்டோபர் 2026, 9:21 am IST

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெறுகிறது. முதல் நாளான ஞாயிறன்று மாலை ராஜராஜேஸ்வரி அலங்காரத்தோடு பக்தர்களுக்கு காட்சியளித்தார் அம்மன். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முதல் நவராத்திரி விழா தொடங்கி அக்டோபர் 20 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற உள்ளது.

நவராத்திரி திருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற உள்ளன. மேலும், கொலுச்சாவடியில் எழுந்தருளும் உற்சவ அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் விதவிதமான சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட உள்ளன.

அதன்படி, முதல் நாளான ஞாயிறன்று (அக்டோபர் 11), ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. நவராத்திரியின் முதல் நாளான நேற்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்தோடு பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார்.

தொடர்ந்து 2ஆம் நாளான அக்டோபர் 12ஆம் தேதி அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலம், 3ஆம் நாளான அக்டோபர் 13ஆம் தேதி கோலாட்டம், 4ஆம் நாளான அக்டோபர் 14ஆம் தேதி பட்டாபிஷேக திருக்கோலம், 5வது நாளான அக்டோபர் 15ஆம் தேதி தபசு அலங்காரம் நடைபெறும்.

6வது நாளான அக்டோபர் 16ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம், 7ஆம் நாளான அக்டோபர் 16ஆம் தேதி முத்தங்கி சேவை, 8வது நாளான அக்டோபர் 18ஆம் தேதி மஹிஷாசுரமர்த்தினி காட்சி, 9வது நாளான அக்டோபர் 19ஆம் தேதி சிவபூஜை மற்றும் 10வது நாளான அக்டோபர் 20ஆம் தேதி விஜயதசமி சடையலம்புதல் போன்ற அலங்காரங்களில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.

நவராத்திரியை முன்னிட்டு காலை - மாலை வேளைகளில் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் திருமுறை இன்னிசை, பக்தி இன்னிசை, பரதநாட்டியம், ஆன்மீகச் சொற்பொழிவுகள் மற்றும் கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.