தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் மேயர் பிரியா ஆய்வு!

முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் மேயர் பிரியா ஆய்வு செய்தது பற்றி...

Mayor Priya inspects Chief Minister Vijay Perambur constituency

திருவிக நகர் பகுதியில் மேயர் பிரியா ஆய்வு - X / Chennai corporation

Published On :21 அக்டோபர் 2026, 12:05 pm IST

பெரம்பூர் சுரங்கப் பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் அகற்றும் பணிகளை மேயர் பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்தது.

இதையடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அமைச்சர்கள், அதிகாரிகளும் தங்கள் தொகுதிகளில் மழைநீர் அகற்றும் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னை மேயர் பிரியா, முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் இன்று (அக். 21) ஆய்வு மேற்கொண்டார்.

பெரம்பூர் சுரங்கப் பாதையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் அகற்றும் பணிகளை மேயர் பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைநீர் அகற்றும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

முன்னதாக, திரு.வி.க. நகர் மண்டலம், ஸ்டீபன்சன் சாலை செங்கை சிவம் பாலம், ஓட்டேரி நல்லா கால்வாய் பகுதிகளிலும் மேயர் பிரியா ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில், கண்காணிப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Summary

Mayor Priya inspects Chief Minister Vijay Perambur constituency

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.