பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேயர் பிரியாவை புறக்கணிக்கிறதா தவெக அரசு? ராஜ்மோகன் பதில்!

தவெக அரசு தன்னை புறக்கணிப்பதாக மேயர் பிரியா கூறியதற்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்....

Is the TVK government ignoring Mayor Priya, Rajmohan response

மேயர் பிரியா | அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்

Published On :24 அக்டோபர் 2026, 3:19 pm IST

சென்னை மேயர் பிரியாவை தவெக அரசு புறக்கணிக்கவில்லை, அவர் அழைப்புவிடுத்தால்தான் வர வேண்டும் என்று கிடையாது என அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.

முதல்வர் விஜய், சென்னை ரிப்பன் மாளிகைக்கு ஆய்வுக்கு வரும்போது தனக்கு தகவல் தெரிவிக்கவில்லை, அழைக்கவில்லை என்று மேயர் பிரியா கூறியிருந்தார்.

இதுபற்றி மேயர் பிரியா, "முதல்வர் விஜய், சென்னை ரிப்பன் மாளிகைக்கு வரும்போது எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அவர் வந்தபிறகு எனக்கு தகவல் சொல்கிறார்கள். முன்கூட்டியே சொன்னால்தானே நான் செல்ல முடியும். அதன்பிறகு மேயர் வரவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள். உண்மையில் மேயர், அரசை புறக்கணிக்கவில்லை. தவெக அரசு தான் மேயரை புறக்கணிக்கிறது. நான் திமுகவில் இருக்கிறேன் என்பதால் புறக்கணிக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.

இதற்கு இன்று பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், "மேயரை நாங்கள் புறக்கணிக்கவில்லை. அழைப்பு விடுத்தால்தான் அவர் ரிப்பன் மாளிகைக்கு வர வேண்டும் என்று கிடையாது. அவர் தாராளமாக எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

மழை வெள்ளத்திற்கு எந்த கட்சி என்று தெரியாது. அதனால் மீட்பு நடவடிக்கையின்போது ஒருங்கிணைப்பு வேண்டும். நான் ஒரு அமைச்சர், நான் கூப்பிடாமல்தான் வருகிறேன்.

அழைப்பு விடுத்தால்தான் வருவேன் என்று பழையபடி இல்லாமல் அவர்களாக வர வேண்டும். மேயரின் ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால் புரோட்டோகால் பார்க்காமல் யார் வேண்டுமானாலும் வரலாம்" என்றார்.

Summary

Is the TVK government ignoring Mayor Priya, Rajmohan response

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.