பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதல்வருக்காக காலை முதல் காத்திருக்க முடியுமா? மேயர் பிரியா ஆவேசம்!

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா ஆவேசம்...

mayor priya

மேயர் பிரியா - x

Published On :29 அக்டோபர் 2026, 1:23 pm IST

ரிப்பன் மாளிகைக்கு முதல்வர் வருகிறார் என்றால் காலை முதல் இரவு வரை காத்திருக்க முடியுமா என்று சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்று வரும் நிலையில், அரசு நிகழ்ச்சிகளுக்கு மாமன்ற உறுப்பினர்களுக்கு எந்த தகவலும் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

முன்பெல்லாம் அரசு நிகழ்ச்சி என்றால் மக்கள் தொடர்பு அலுவலர் அழைத்து தகவல் சொல்வார், ஆனால், தற்போது எந்த தகவலும் அளிக்கப்படுவதில்லை என்று மாமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

அப்போது மேயர் பிரியா பேசியதாவது:

”மாமன்றத்தில் பதவிக் காலம் நிறைவடைய இன்னும் சில மாதங்களே உள்ளன. ஆனால், ஒவ்வொரு மாதமும் இதே குற்றச்சாட்டு எழுகிறது. அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்தான். ஒரு திட்டத்தை செயல்படுத்த ஓராண்டுக்கு மேல் ஆகும், அதுவரை அந்த திட்டத்தை மாமன்ற உறுப்பினர்கள் கண்காணித்து பணிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், அவர்களை அழைக்காமலேயே எம்.எல்.ஏ.க்கள் திறந்துவைக்கிறார்கள். அதிகாரிகள் அரசியல் சார்பின்றி செயல்பட வேண்டும்.

மாமன்ற உறுப்பினர்கள், மண்டலத் தலைவர்கள் மட்டுமல்ல மேயரான எனக்கும் இதே நிலைதான். நான் முதல்வரின் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறுகிறார்கள். முதல்வர் ரிப்பன் மாளிகைக்கு வருகிறார் என்றால் நேரத்தை கூறினால்தான் வர முடியும். அவர் வருகிறார் என்பதற்காக காலையிலிருந்து இரவு வரை ரிப்பன் மாளிகையில் இருக்க முடியுமா? மாமன்ற உறுப்பினர்களை புறக்கணிக்க அதிகாரிகளுக்கு ஏதேனும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டதா? இதற்கு மாமன்றத்தையே கலைத்துவிட்டு போகலாமே” எனத் தெரிவித்தார்.

Summary

Can you wait from the morning for the Chief Minister - Mayor Priya asks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.