தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சரணடைந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரை நவ.12 வரை சிறையில் அடைக்க உத்தரவு!

சரணடைந்த முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமாரை நவ.12 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...

முத்துகுமார்

Published On :29 அக்டோபர் 2026, 3:37 pm IST

லஞ்சம் பெற்ற வழக்கில் சரணடைந்த முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமாரை நவ.12 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க சுமார் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் அப்போதைய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பி.டி.அரசகுமார், முத்துகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த அக். 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முத்துக்குமார் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நேற்று (அக். 28) தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், இன்று காலை சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன் முத்துக்குமார் சரணடைந்தார்.

தாமாக முன்வந்து சரணைடைந்த முத்துக்குமாரை நவ. 12-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முதல் வகுப்பு சிறை வழங்கவும் மருத்துவர் வசதிகள் செய்து கொடுக்கவும் நீதிபதி சத்தியமூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Summary

A special court in Chennai has ordered that former MLA Muthukumar, who surrendered in a bribery case, be remanded in judicial custody until November 12.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.