தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உதகை மலை ரயில் சேவை அக். 29 ஆம் தேதி வரை ரத்து!

தொடர்மழை காரணமாக, உதகை மலை ரயில் சேவை அக். 29 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து...

train

உதகை மலை ரயில். - கோப்புப்படம்

Published On :26 அக்டோபர் 2026, 3:50 pm IST

தொடர்மழை காரணமாக, உதகை மலை ரயில் சேவை அக். 29 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.

இதனால், கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவு, மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மண் சரிவை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் - குன்னூர் பகுதிகளில் தொடர் கனமழை பெய்ததன் காரணமாக, ரயில் தண்டவாளங்களில் பாறை, மண் சரிந்ததால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

சீரமைக்கும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள், தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், வரும் 29 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Summary

Due to continuous rain, the Udhagamandalam (Ooty) mountain railway service has been cancelled until October 29.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.