பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தவறாக சித்திரித்து விடியோ வெளியிடும் தவெக ’விர்சுவல் அப்யூசர்ஸ்’! மேயர் பிரியா கண்டனம்!

தவெக சமூக ஊடகப் பிரிவினர் குறித்து மேயர் பிரியா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள்...

Mayor priya

சென்னை மேயர் ஆர். பிரியா - x

Published On :21 அக்டோபர் 2026, 12:25 pm IST

தவெகவின் சமூக ஊடகப் பிரிவினர் தன்னை தவறாக சித்திரித்து விடியோ வெளியிடுவதாக சென்னை மேயர் ஆர். பிரியா குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

சென்னையில் கடந்த அக். 7-ல் நடைபெற்ற திமுக கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீது தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், முதல்வர் விஜய் குறித்து திமுக கவுன்சிலர் அநாகரிகமாக பேசுவதை கேட்டு, மேடையில் இருந்த சென்னை மேயர் பிரியா சிரிக்கும் விடியோ இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், தவெகவினர் மீது குற்றச்சாட்டை முன்வைத்து மேயர் பிரியா வெளியிட்டிருக்கும் விடியோவில் பேசியதாவது:

“நான் என்றெல்லாம் மேடைகளில் தவெக அரசையும் நிர்வாக சீர்கேட்டையும் கண்டித்து பேசிகிறேனோ, அதற்கு மறுநாளே என்னை தவறாக சித்திரித்து விர்சுவல் வாரியஸ் என்று சொல்லக் கூடிய விர்சுவல் அப்யூசர் சமூக ஊடகங்களில் விடியோ வெளியிடுகிறார்கள்.

திமுகவில் இருப்பவர்களுடன் என்னை தவறாக ஏஐ வைத்து சித்திரித்து விடியோக்கள் வெளியிடுகிறார்கள். பொதுமக்களிடையே இதுபோன்ற விடியோக்களை வெளியிடுவதால் எனது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கிறது.

இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்று மீண்டும் சமூக ஊடகங்களில் தவறாக சித்திரிக்கப்பட்ட விடியோக்களை பதிவிட்டுள்ளனர். இன்றும் புகார் அளித்துள்ளேன். இதன் மீதாவது நடவடிக்கை எடுப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.

பெண்கள் பாதுகாப்பு குறித்து தவெக பேசுகின்றனர். மேயராகவும் ஒரு பெண்ணாகவும் இருக்கும் நான் இதுதொடர்பாக பலமுறை பேசியும் வாய்த்திறக்காமல் இருக்கிறார் இன்றைய முதல்வர்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கடந்த 5 ஆண்டுகளாக பெண்கள் வளர்சிக்கான ஆட்சியைதான் நடத்தினார். இன்று பல பெண்கள் பயனடைந்துள்ளார்கள். ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் பெண்கள் பாதுகாப்பு எனக் கூறிவிட்டு, விர்சுவல் வாரியர்ஸ் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ளார்கள்.

சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருக்கக்கூடிய பெண் ஒருவர் மேடையில் பேசியபோது, அதே மேடையில் இருந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கண்டித்தார். சேகர்பாபுவும் கண்டித்தார். இதுபோன்று ஒரு இடத்திலாவது முதல்வரோ அமைச்சரோ கண்டித்த தகவல் இருக்கிறதா?

பெண்களை தவறாக பேசி, சித்திரிக்கும் தவெக அரசை கண்டிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

Mayor Priya condemns 'virtual abusers' for posting fake misleading videos

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.