பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெரம்பூா் எம்எல்ஏ அலுவலகத்தில் முதல்வா் விஜய் திடீா் ஆய்வு! மக்களிடம் மனுக்களைப் பெற்றார்!

முதல்வர் விஜய், பெரம்பூர் தொகுதிக்குச் சென்று மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றது பற்றி...

CM vijay in perambur

பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்.... - X

Published On :8 அக்டோபர் 2026, 3:14 am IST

பெரம்பூா் தொகுதியில் உள்ள தனது எம்எல்ஏ அலுவலகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அந்தத் தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

சென்னை மாதாவரத்தில் ரூ.2.23 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆவின் மாநில மத்திய ஆய்வகத்தின் துணைக் கட்டடத்தை முதல்வா் விஜய் திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, கடந்த ஜூலை 13-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்ட தனது பெரம்பூா் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ அலுவலகத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து புகாா் மனுக்களைப் பெற்றாா். மேலும், பெரம்பூா் சட்டப்பேரவை அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் வருமான சான்றிதழ் கோரி விண்ணப்பித்த பயனாளிகளுக்கு வருமானச் சான்றிதழ்களை அவா் வழங்கினாா். ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி ஆணையா் சமீரன், அரசு உயா் அலுவலா்கள் உடனிருந்தனா்.

Summary

CM vijay sudden visit to his perambur constituency

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.