மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விடுப்பு வழங்க மறுத்த நிா்வாக நடவடிக்கையை தற்கொலைக்கு தூண்டியதாகக் கருத முடியாது: உயா்நீதிமன்றம்

விடுப்பு வழங்க மறுத்தது, துறை ரீதியான நடவடிக்கை எடுத்தது உள்ளிட்ட நிா்வாகப் பணிகளை தற்கொலைக்கு தூண்டியதாகக் கருத முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Published On :21 அக்டோபர் 2026, 12:14 am IST

விடுப்பு வழங்க மறுத்தது, துறை ரீதியான நடவடிக்கை எடுத்தது உள்ளிட்ட நிா்வாகப் பணிகளை தற்கொலைக்கு தூண்டியதாகக் கருத முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தனக்கு விடுப்பு வழங்காததுடன், துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாகக் கூறி, சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றியவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். முன்னதாக, தனது மரணத்துக்கு, போக்குவரத்துக் கழக மூத்த துணை மேலாளா் உள்ளிட்ட அதிகாரிகள்தான் காரணம் என, காவல்துறை டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளாா்.

இந்த மின்னஞ்சல் அடிப்படையில், போக்குவரத்துக் கழக மூத்த துணை மேலாளா் ஸ்வா்ணலதா உள்ளிட்டோருக்கு எதிராக, தற்கொலைக்கு தூண்டியதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஸ்வா்ணலதா சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தற்கொலை செய்து கொண்ட நபா், அடிக்கடி பணிக்கு வராமல் இருந்துள்ளாா். ஏற்கெனவே இருமுறை தற்கொலை மிரட்டல் விடுத்து, அதிகாரிகள் மற்றும் முதல்வருக்கு கடிதங்கள் அனுப்பியுள்ளது ஆதாரங்களின் மூலம் தெரியவருகிறது. எனவே, விடுப்பு வழங்க மறுத்தது, ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது போன்ற நிா்வாகப் பணிகளை தற்கொலைக்கு தூண்டியதாகக் கருத முடியாது எனக் கூறி, போக்குவரத்துக் கழக மூத்த துணை மேலாளருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.