மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போக்குவரத்துக் கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மின்சார பேருந்துகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கத்தினா் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் போக்குவரத்துக் கழக பணிமனை முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள்.

Published On :28 அக்டோபர் 2026, 3:37 am IST

மின்சார பேருந்துகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கத்தினா் கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். சம்மேளன நிா்வாகக் குழு உறுப்பினா் முனியப்பன், துணை பொதுச் செயலா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், 2003, ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சோ்ந்த போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தின் கீழ் 9 மாதங்களாக நிலுவையில் உள்ள தொகை மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

நீதிமன்ற உத்தரவுப்படி சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டும். மின்சார பேருந்துகளை அரசே ஏற்று நடத்துவதுடன், அவற்றால் ஏற்படும் வருவாய் - செலவு வித்தியாசத் தொகையை அரசே ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், பொதுச் செயலா்கள் முரளி, முருகன், முன்னாள் சம்மேளன நிா்வாகி பாஸ்கரன், பொருளாளா் அரும்பாலன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.